Thursday, March 24, 2016

என்னுள் நீ - பகுதி 1


                                                   என்னுள் நீ 


                 நான் ரகு. அனைவரையும் போல ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்பவன். ஒரு இரண்டாம் நிலை கம்பெனியில் வேலை, மாதம் 18,000 சம்பளம், வாடகை வீடு, ஒரு Splender பைக், மாதம் ஒன்றிரண்டு சினிமா, தங்கையின் திருமணம், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இப்படி எல்லோரையும் போல் வாழ்ந்து வருகிறேன். ஆனால் எனக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது.
 கதை என்று சொல்வதை விட இன்பமான நினைவுகள் என்றே சொல்லலாம். அதை இன்று நினைத்தாலும் நேற்று நடந்ததை போலவே இருக்கிறது. நான் திரும்ப அந்த நாட்களை வாழ நினைக்கிறேன். செய்த தவறை திருத்திக்கொள்வதற்காக இல்லை. அந்த நாட்கள் தான் என் வாழ்வின் மிக சிறந்த நாட்கள். ஒரு ஆண் இப்படி பேசுகிறான் என்றால் என்ன காரணமாக இருக்க முடியும்... எல்லாம் ஒரு பெண் தான். ஆம் என்னவள் தான் காரணம். 

                         
                                                                                      26, ஆகஸ்ட் 2010 

நண்பா,
          
                நான் எனது சுக துக்கங்களை நிறைய உன்னிடம் பகிர்ந்திருக்கிறேன். அனால் இன்று அப்படி இல்லை. சில நாட்களாக அவள் நிறைய கஷ்டங்களையும், வலிகளையும் அனுபவித்து வருகிறாள். நான் அவளை ஒரு குழந்தையாக, பிரச்சனைகளை சமாளிக்கும் பக்குவமடைந்த பெண்ணாகவும் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று இப்படி பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. நானாக இருந்தால் இவ்வளவு பிரச்சனைகளை கண்டு உடைந்து போயிருப்பேன். ஆனால் இவளோ காபி ஷாப்பில் உட்கார்ந்து காபி குடித்து கொண்டிருக்கிறாள். ஏன் இவள் இப்படி செய்து கொண்டிருக்கிறாள்?? ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆண்கள் பைத்தியக்காரத்தனமாக இருந்து பார்த்திருக்கிறேன், ஆனால் இன்று ஒரு பெண் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வதற்கு நானே சாட்சியாகிவிட்டேன். நான் பார்த்து நேசித்த பெண் இவள் இல்லை. அவள் ஒரு அழகிய பதுமை. அந்த அழகிய பதுமை இன்று பயமுறுத்தும் விதமாக மாறிவிட்டாள். எனக்கு மீண்டும் அந்த பதுமை  வேண்டும்... 

No comments:

Post a Comment