Monday, April 4, 2016

என்னுள் நீ - பகுதி 2




                                               கல்லூரியின் முதல் நாள் 


                    கல்லூரியின் முதல் நாள் இன்று. ஒரு வாரத்திற்கு முன்பே கல்லூரி செல்வதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி, அழகாக முடி வெட்டி தயார் ஆகிவிட்டேன். இனி இந்த uniform எல்லாம் போடா வேண்டாம் என்று நினைக்கும்போது சந்தோசமாக இருக்கிறது. ஆனால் புது இடம், புது நண்பர்கள், சீனியர்கள் என்று நினைக்கும் போது பயமாகத்தான் இருக்கிறது.





                சாம்பல் நிற முழுக்கை சட்டையும், கருப்பு நிற பேண்டும் அணிந்து tuck in செய்து கொண்டு 7.20 மணிக்கெல்லாம் பஸ் ஸ்டாப் போய்டேன். முதல் நாள் என்பதால் ஆர்வத்துடன் வந்துவிட்டேன். ஆனால் இங்கு யாரையும் காணோம். வாட்சை பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன். ஒவ்வொருவராக வர KMR COLLEGE OF TECHNOLOGY என்று எழுதியிருந்த மஞ்சள் நிற பஸ் 7.45 மணிக்கு வந்து நின்றது. என்னையும் உட்பட நான்கு மாணவர்கள் அதில் ஏறினோம். அதில் இருவர் சகஜமாக சென்று அவரவர் நண்பர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டனர். நான் எங்கு உட்கார்வது என்று தெரியாமல் கடைசி சீட்டில் உட்கார சென்றேன். அனைவரும் என்னையே பார்ப்பது போல் ஒரு தோணல். கடைசியில் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். இன்னொருவனும் என்னை தொடர்ந்து என் அருகில் வந்து உட்கார்ந்தான். அவன் யாரிடமும் பேசாமல் இருக்கும் போதே தெரிந்தது அவனும் கல்லூரிக்கு புதிது என்று. ஒரு அரை மணி பயணத்திற்கு பிறகு பஸ் கல்லூரிக்குள் நுழைந்தது. பஸ் விட்டு இறங்கினேன். எனக்கு என்ன செய்வது, எங்கு செல்வது என்றே தெரியவில்லை. அனைவரையும் போகும் வழியில் போய்க்கொண்டிருந்தேன். " FIRST YEAR IN B-BLOCK" என்ற போர்டு கண்ணில் பட்டது. அதில் போட்டிருந்த அம்பு குறியின் வழியே சென்று B-BLOCK ஐ அடைந்தேன். வாட்சை பார்த்தேன் 8.25. ஐந்து நிமிடத்தில் கிளாஸ் ஆரமித்துவிடும் என்ற படபடப்பில் கிளாஸ் ரூமை தேட விரைந்தேன். முதல் மாடியில் இடது புறத்தில் முதல் அறை. " FIRST YEAR CIVIL ENGINEERING" போட்டிருந்த அறையை அடைந்தேன். முகமெல்லாம் வியர்த்துவிட்டது. Kerchief ஐ எடுத்து நன்கு துடைத்து விட்டு உள்ளே செல்ல நின்றேன்.
                   30-32 வயது மதிக்கத்தக்க ஆசிரியை ஒருவர் இருந்தார். " May I come in Mam " என்றேன். என்னை பார்த்து தலையசைத்தாள். உள்ளே சென்று வலது புறத்தில் நான்காவது வரிசையில் உட்கார்ந்து கொண்டேன். ஆசிரியை, கல்லூரியை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நான் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அறையை நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். போர்டில் " WELCOME TO FRESHERS " எழுதியிருந்தது. ஐன்ஸ்டீன், அப்துல் கலாம் போட்டோ ஒட்டப்பட்டிருந்தது. மாணவர்களை பார்த்தேன், அனைவரும் ஆசிரியர் சொல்வதையே நன்கு கவனித்துக்கொண்டிருந்தனர்.
   
                 " May I come in Miss " என்று ஒரு இனிமையான குரல். அனைவரின் கண்ணும் இப்பொழுது வாசலை நோக்கி இருக்கிறது.

                 "குதிரை வால் சடை, மை பூசிய கண்கள்
                 அனைவரையும் வசீகரிக்கும் வட்ட முகம்    
                 இராமனையே கட்டி இழுக்கும் புன்னகை" கொண்ட ஒரு தேவதை நின்று கொண்டிருந்தாள். அவளை தேவதை என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது.

             எல்லா ஆடவரின் கண்ணும் இப்பொழுது அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தது. உள்ளே வந்த அவள் நடு வரிசையில் இரண்டாவது இருக்கையில் அமர்ந்தாள்.

            முன்னால் விழும் முடியை காதருகே செருகும் அழகு இருகிறதே.. அடடா... என்ன சொல்லவதென்றே தெரியவில்லை. காதில் இருக்கும் கம்மல் என் இதய துடிப்பிற்கு ஏற்றார் போல் ஆடுகிறது. இதற்கு முன் இவ்வளவு அழகான பெண்ணை நான் சந்தித்தே இல்லை.

            " என்னடா ரகு இதுக்கு முன்னாடி நீ இப்படிலா இல்லையே " என்று எனக்குள் சொல்லிக்கொண்டிருக்கையில், நோட்டை எடுத்துக்கொண்டு ஒருவர் வந்தார். அவருடைய உடை, வந்த விதத்தை வைத்து பார்க்கையில் Attender என்று நினைக்கிறேன்.

             அவர் சென்ற பிறகு ஆசிரியர் Attendance எடுக்க ஆரம்பித்தார். நான் மிகவும் ஆவலானேன். எதற்கு? Attendance சொல்வதற்கா?? இல்லை இல்லை. அவள் பெயரை தெரிந்துகொள்வதற்காக. ஆசிரியர் ஒவ்வொரு பெயராக அழைக்க என்னுடைய ஆவல் அதிகரித்தது. இருக்கையின் நுனியில் அமர்ந்துக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

            ஆசிரியர் " சாரா " என்று அழைக்கையில் அவள் கையை உயர்த்தி " Present Miss " என்றாள்.
       
அவ்வளவுதான்...

          " சாரா " "சாசாராராரா "  "சாசாசாராராராரா " என் மண்டைக்குள் இந்த பெயர் தான் சுற்றி கொண்டிருக்கிறது.


                                                                                                               6 ஜூன், 2008

           நண்பா,
                             முதல் நாள். நான் நினைத்ததை விட நன்றாகவே சென்றது. என் வாழ்வின் மிக சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று. இவ்வளவு சிறப்பாக மாற்றியதற்கு ஒரு பெண் தான் காரணம். தங்கப்பதுமை என் கவனத்தை ஈர்த்தாள். கண்கள் என் கட்டுப்பாட்டிலேயே இல்லை. அவ்வளவு அழகு. ஒவ்வொருவரின் கனவிலும் ஒரு பெண் இருப்பாளே, அப்படி என் கனவில் இருக்கும் பெண் தான் இவள். என்னை மட்டும் நீ இன்று பாத்திருந்தால், " என்னடா, இவன் நாயை போல ஆயிட்டான் " என்று கூறுவாய். ஆங்கிலத்தில் " Love at First Site " என்பார்களே அது இது தானோ??

No comments:

Post a Comment