அன்னை
நான் பார்த்து வியந்த பெண்களுள் என் அன்னையும் ஒருவள்...
சிறு வயதில் என்னை அடித்தாள் என்பதற்காக டியூஷனை நிறுத்தி எனக்கு வாத்தியாரானால்... ஆனால் அங்கு வாங்கியதை விட இவளிடமே அதிக அடி வாங்கினேன். அன்றோ வீட்டு பாடத்தை கற்று கொடுத்தாள், இன்றோ வாழ்க்கை பாடத்தை...
என்னதான் அவளுக்கு பசியாக இருந்தாலும் சாப்பிடும் போது ஒரு வாய் ஊட்டுவாளே அடடா... அதற்காக தினம்தினம் பட்டினி கிடக்கலாம்...
அடித்தாலும் திட்டினாலும் அடுத்த நிமிடமே கோபத்தை மறந்து அன்புடன் பேசுவாளே.. என்னால் இப்படி இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்..
No comments:
Post a Comment