நினைவுகள்
அப்பாவின் TVS 50இன் முன்னால் உட்கார்ந்து ஊரை வேடிக்கை பார்த்து போவது அலாதி இன்பம்...
Aeroplane சத்தம் கேட்டால் வாய் பிளந்து வான் பார்க்கும் பழக்கம் இன்னும் போகவில்லை என்னை விட்டு...
அம்மா சொல்லும் பொருட்களை சொல்லிக்கொண்டே சென்று அதிலும் ஒன்றிரண்டை மறந்து அம்மாவிடம் திட்டு வாங்கினதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது...
வெள்ளிக்கிழமையே கொடுத்த Rank Cardஐ இரு தினம் கழித்து பள்ளி வாசலில் நின்று மறந்துட்டேன் என்று சொன்னதை இன்று என் மகன் என்னிடம் சொல்கிறான்...
ஓரிரு ரூபாய்க்கு தாத்தா சொல்லும் வேலைகளை வேகமாக முடித்து அதில் வாங்கி தங்கையை ஏமாற்றி தின்னும் தேன் மிட்டாய்க்கும் கடலை பர்பிக்கும் கோடி ரூபாய் கொடுத்தாலும் போதாது...
அப்பாவின் வண்டி சத்தம் கேட்டவுடம் ஓடிச் சென்று போகும் ஒரு ரவுண்டு என்றும் இருக்கும் நீங்காத நினைவுகள்...
No comments:
Post a Comment