Thursday, February 25, 2016

நட்பு

           


                                              நட்பு 


                   உலகின்  மிக  சிறந்த  உறவு  நட்பு. அதுவும்  ஆண்  பெண்  நட்பு  என்பது  கூடுதல்  சிறப்பு...

                  தவறு  செய்யும்  போது  தந்தையாகவும், அக்கறை எடுத்துக்கொள்ளும்  தாயாகவும், சிறு  விஷயங்களுக்கு  சண்டை  போடும் தங்கையாகவும், துவண்டு  போகும்  போது  உறுதுணையாக  நிற்கும்  சிறந்த தோழியாகவும்  இருப்பவள்  அவள்...

                 ஆனால்  இச்சமுதாயமோ  இன்னும்  இந்த  நட்பை  தப்பான கண்ணோட்டத்திலேயே  பார்த்து  வருகிறது. சமுதாயத்தை  விடுங்கள், சில சமயம்  நம்  நண்பர்களே  அப்படித்தான்  நினைக்கிறார்கள். இதை  முற்றிலும் திருத்திக்கொள்ள  வேண்டும்...

அன்னை


                                         அன்னை 


                  நான் பார்த்து வியந்த பெண்களுள் என் அன்னையும் ஒருவள்...

                 சிறு வயதில் என்னை அடித்தாள் என்பதற்காக டியூஷனை நிறுத்தி எனக்கு வாத்தியாரானால்... ஆனால் அங்கு வாங்கியதை விட இவளிடமே  அதிக அடி வாங்கினேன்.  அன்றோ வீட்டு பாடத்தை கற்று கொடுத்தாள், இன்றோ வாழ்க்கை பாடத்தை...

                என்னதான் அவளுக்கு பசியாக இருந்தாலும் சாப்பிடும் போது ஒரு வாய் ஊட்டுவாளே அடடா... அதற்காக தினம்தினம் பட்டினி கிடக்கலாம்...

                 அடித்தாலும் திட்டினாலும் அடுத்த நிமிடமே கோபத்தை மறந்து அன்புடன் பேசுவாளே.. என்னால் இப்படி இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்..

Wednesday, February 24, 2016

வாழ்வின் சுவாரசியம்



                          வாழ்வின் சுவாரசியம்     


                  நம் வாழ்வில் வரும் கதாப்பாத்திரங்களுள் சிலவற்றை மறக்க நினைக்கிறோம், சிலவற்றை மறுக்க நினைக்கிறோம், சிலவற்றை மன்னிக்க நினைக்கிறோம், சிலவற்றை மணக்க நினைக்கிறோம். ஆனால் இவை அனைத்தும் நமக்கு நடப்பதில்லை... ஏன்???

                 ஏனென்றால், அனைத்தும் நடந்து விட்டால் வாழ்வின் சுவாரசியம் குறைந்து விடும்...

                 சுகம், துக்கம், வலி, வெறுப்பு, அன்பு, சொந்தம், பிரிவு  இவை அனைத்தும் கலந்தது  தான் வாழ்க்கை... ஒன்று மட்டுமே நிலைத்திருந்தால் அது நரகமாகிவிடும்... 

Tuesday, February 23, 2016

பிரச்சனை




                                     பிரச்சனை                                                                                               

              நான்  ஒன்று  சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்,எனக்கு மிகவும் உதவியது. உங்களுக்கும் உதவும் என்று நம்புகிறேன்...

             வாழ்வில்  நம்மை  சுற்றவைக்கும்  நம்மை  சுற்றும்  பிரச்சனைகள் வரும்  போது, "இதுவும்  கடந்து போகும்" என்று சொல்லி உங்கள்  வேலைகளை பார்க்க போங்கள் எல்லாம் சரி ஆகிவிடும்... 

Saturday, February 20, 2016

பருவக்காதல்




                                     பருவக்காதல் 


                             சீக்கிரம்  எழுந்து  குளித்து  எட்டு மணிக்கே  ஸ்கூல்கு  போறது எதுக்கு  எல்லாம்  பச்சபாவாடை  போட்டுவர  பவித்ராவை  பாக்கத்தான்...
இப்பலாம்  அவள  பிடிக்குது.  அந்த  ரெட்டசடை,  அதுல  இருக்க  கருப்பு  ரிப்பன், குண்டு  குண்டு  கண்கள்,  அந்த புருவங்களுக்கு  நடுவில்  இருக்கும் சந்தனம்,  முகத்தில்  இருக்கும்  ஒன்றிரண்டு  பருக்கள்,  கழுத்துல  இருக்க  tag  எல்லாமே  பிடிக்குது...... இதுக்கு  பேரு  தான்  காதலோ???      

Friday, February 19, 2016

கல்லூரி


                                                     



                                                       கல்லூரி 


                                                   ஒரு கனவுடனும்
                                              பல கற்பனையோடும்
                                        நிறைய எதிர்பார்ப்புகளோடும்,
                                           கொஞ்சம் பயம் கொண்டும்
                          சிலர் காதலினாலும், பலர் கம்பள்சனினாலும்
                          சிலர் பேருக்கெனவும், பலர் பேரெடுபதற்கும்
                                               வரும்  இடம் கல்லூரி...

நினைவுகள்

                                        



                                               நினைவுகள் 


                  அப்பாவின் TVS 50இன் முன்னால் உட்கார்ந்து ஊரை வேடிக்கை    பார்த்து போவது அலாதி இன்பம்...

                  Aeroplane சத்தம் கேட்டால் வாய் பிளந்து வான் பார்க்கும் பழக்கம்  இன்னும் போகவில்லை என்னை விட்டு...

                   அம்மா சொல்லும் பொருட்களை சொல்லிக்கொண்டே சென்று   அதிலும் ஒன்றிரண்டை மறந்து அம்மாவிடம் திட்டு வாங்கினதை   நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது...

                  வெள்ளிக்கிழமையே கொடுத்த Rank Cardஐ இரு தினம் கழித்து பள்ளி   வாசலில் நின்று மறந்துட்டேன் என்று சொன்னதை இன்று என் மகன் என்னிடம் சொல்கிறான்...

                  ஓரிரு ரூபாய்க்கு தாத்தா சொல்லும் வேலைகளை வேகமாக முடித்து  அதில் வாங்கி தங்கையை ஏமாற்றி தின்னும்  தேன் மிட்டாய்க்கும்  கடலை பர்பிக்கும் கோடி ரூபாய் கொடுத்தாலும் போதாது...

                  அப்பாவின் வண்டி சத்தம் கேட்டவுடம் ஓடிச் சென்று போகும் ஒரு ரவுண்டு  என்றும் இருக்கும் நீங்காத நினைவுகள்...

என் தங்கையும் ஒருவள்

                                         





                                          என் தங்கையும் ஒருவள் 



                     என்னதான் அண்ணனை கேலி செய்தாலும் மற்றவர்கள் முன்பு என் அண்ணன் என்று சொல்லும் தங்கைகளுள்  என் தங்கையும் ஒருவள்...

                    தோழிகளிடம் அண்ணனின் மானத்தை வாங்கும் தங்கைகளுள் என் தங்கையும் ஒருவள்...

                    ரொம்ப நாள் கழித்து வீடு சென்றால்,  ஊர் கதைகள் அனைத்தும் பேசும்  தங்கைகளுள் என் தங்கையும் ஒருவள்...
   
                    என்னதான் அடித்து கொண்டு தின்றாலும் தனியே தின்னாமல் அண்ணனுக்கு கொடுத்து உண்ணும் தங்கைகளுள் என் தங்கையும் ஒருவள்...